Search

Breaking

Wednesday, May 12, 2021

உயிரின் இரசாயன அடிப்படை

உயிரின் இரசாயன அடிப்படை

திணிவை உடையதும் இடத்தை அடைப்பதுமான பொருட்கள் சடப்பொருட்கள் எனப்படுகின்றன. இதற்கமைய உயிர் அங்கிகளையும் சடப்பொருட்களாக கொள்ளலாம்.


இரசாயனவியலினடிப்படையில் சடப்பொருட்கள் ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகை மூலக அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பதுடன். ஒரே வகை அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலகங்களை ஆக்குகின்றன.


உடல் நிறையில் 0.01% அல்லது 0.01% ற்கும் அதிகளவில் காணப்படும் மூலகங்கள் மா மூலகங்கள் எனவும் 0.01% ற்கும் குறைந்தளவில் காணப்படும் மூலகங்கள் நுண் மூலகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. மனிதனில் காபன்,ஐதரசன்,ஒட்சிசன்,பொஸ்பரசு,பொற்றசியம்,நைதரசன்,கந்தகம்,மக்னிசியம்,கல்சியம்,சோடியம்,குளோரின் ஆகியன மா மூலகங்களாகக் காணப்படுவதுடன், இரும்பு,செப்பு,நாகம்,கொபோல்டு,மங்கனேற்று போன்றவை நுண் மூலகங்களாகவும் காணப்படுகின்றன.


புவியோட்டில் ஒட்சிசன்,சிலிக்கன்,அலுமினியம்,சோடியம் ஆகிய 4 மூலகங்கள் பிரதான காணப்படுவதுடன்.உயிரங்கிகளின் உடலில் ஒட்சிசன்,காபன்,ஐதரசன்,நைதரசன் ஆகிய 4 மூலகங்கள் முறையே  நூற்று வீத அடிப்படையில் அதிகம் காணப்படுகின்றன.


இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மூலகங்கள் எளிய முழு எண் விகிதத்தில் சேர்ந்து சேர்வைகளை ஆக்கியுள்ளன.இவற்றுள் காபனேற்றுக்கள்,ஒட்சைட்டுக்கள் தவிர்ந்த காபனைப் பிரதானமாகக் கொண்ட சேர்வைகள் சேதனச் சேர்வைகள் எனவும்.காபனேற்றுக்கள்,காபனின் ஒட்சைட்டுக்கள் உட்பட காபனைப் பிரதானமாகக் கொண்டிராத சேர்வைகள் அசேதனச் சேர்வைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.


உயிரங்கிகளின் உடலை ஆக்கியுள்ள பிரதான சேதனச் சேர்வைகளான காபோவைதரேற்று, புரதம், இலிப்பிட்டு, நியூக்கிளிக்கமிலம் ஆகிய நான்கும் உயிரியல் மூலக்கூறுகள் எனப்படும்.


நீர்,கனியுப்புக்கள்,வாயுக்கள் என்பன உயிர் வாழ்விற்கு இன்றிஅமையாத அசேதனச் சேர்வைகளாகும்.

உயிரியல் மூலக்கூறுகள்



பாடம் சார்பான சுருக்கக் குறிப்புக்கள்
  • ஒட்சிசன்,காபன்,ஐதரசன்,நைதரசன் ஆகிய 4 மூலகங்கள் முறையே  நூற்று வீத அடிப்படையில் அதிகம் காணப்படுகின்றன.

  • சேதனச் சேர்வைகள் - காபனேற்றுக்கள்,ஒட்சைட்டுக்கள் தவிர்ந்த காபனைப் பிரதானமாகக் கொண்ட சேர்வைகள் .

  • அசேதனச் சேர்வைகள் - காபனேற்றுக்கள்,காபனின் ஒட்சைட்டுக்கள் உட்பட காபனைப் பிரதானமாகக் கொண்டிராத சேர்வைகள் .

  • உயிரியல் மூலக்கூறுகள் - காபோவைதரேற்று, புரதம், இலிப்பிட்டு, நியூக்கிளிக்கமிலம்

  • உயிர் வாழ்விற்கு இன்றிஅமையாத அசேதனச் சேர்வைகள் - நீர்,கனியுப்புக்கள்,வாயுக்கள்

No comments:

Post a Comment

Newest