ஒருசக்கரேற்றுக்கள்
ஒரு உப அலகினால் ஆக்கப்பட்டிருப்பதால் இவை எளிய வெல்லங்கள் எனப்படுகின்றன. பொதுவாக இவற்றின் எண்ணிக்கை 3 - 7 ஆகக் காணப்படும்.
3 காபனால் ஆக்கப்பட்ட ஒருசக்கரைட்டுக்கள் மூன்று காபன் வெல்லங்கள் எனப்படும்.இவற்றின் பொது மூலக்கூற்றுச் சூத்திரம் C3H6O3 ஆகும். கிளிசரல்டிகைட், டை ஐதரொட்சி அசிற்றோன் போன்றவை அதற்கான உதாரணங்களாகும்.
4 காபனால் ஆக்கப்பட்ட ஒருசக்கரைட்டுக்கள் நான்று காபன் வெல்லங்கள் எனப்படும்.இவற்றின் பொது மூலக்கூற்றுச் சூத்திரம் C4H8O4 ஆகும்.எரித்திரோஸ் போன்றன அதற்கான உதாரணங்களாகும்.
5 காபனால் ஆக்கப்பட்ட ஒருசக்கரைட்டுக்கள் ஐந்து காபன் வெல்லங்கள் எனப்படும்.இவற்றின் பொது மூலக்கூற்றுச் சூத்திரம் C5H10O5 ஆகும்.இ ரைபோசு, சைலோஸ், அரபினோஸ் போன்றவை அதற்கான உதாரணங்களாகும்.
6 காபனால் ஆக்கப்பட்ட ஒருசக்கரைட்டுக்கள் ஆறு காபன் வெல்லங்கள் எனப்படும்.இவற்றின் பொது மூலக்கூற்றுச் சூத்திரம் C6H12O6 ஆகும்.குளுக்கோசு, பிரக்ரோசு,கலக்ரோசு போன்றவை அதற்கான உதாரணங்களாகும். இவை மூன்றும் ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தை கொண்டிருந்தாலும் கட்டமைப்பில் வேறுபட்ட சமபகுதியங்களாகும்.
7 காபனால் ஆக்கப்பட்ட ஒருசக்கரைட்டுக்கள் ஏழு காபன் வெல்லங்கள் எனப்படும்.செடோகெப்ரியூலோஸ், மன்னோகெப்ரியூலோஸ் போன்றவை அதற்கான உதாரணங்களாகும்.
ஆறு காபன் வெல்லங்கள்
ஆறு காபன் வெல்லங்கள் பொதுவாக பளிங்குருவானவை, நீரில் கரையக் கூடியவை, இனிப்புச் சுவை உடையவை.
குளுக்கோசு
திராட்சைப்பழம், அப்பிள், கரட், தேன் போன்றவற்றில் காணப்படும்.தாவரங்களில் நிகழும் ஒளித்தொகுப்பின் மூலம் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
உயிரங்கிகளில் பிரதான சுவாச அடிப்படையாகத் தொழிற்பட்டு சக்தியைப் பிறப்பிப்பவை இவையாகும். இரண்டு குளுக்கோசு மூலக்கூறுகள் இணைந்து ஒரு மூலக்கூறு மோல்றோசை உருவாக்குகின்றன.ஏனைய இரு சக்கரைட்டுக்களான இலக்ரோசு, கலக்ரோசு போன்றவற்றின் ஆக்கத்திலும் குளுக்கோசுகள் பங்கெடுக்கின்றன.அத்துடன் பல்சக்கரைட்டுக்களான மாப்பொருள், கிளைக்கோயன், செலுலோசு, கலோசு போன்றவற்றின் ஆக்கத்திலும் பங்கெடுக்கின்றன.
பிரக்ரோசு
அதிக இனிப்புச் சுவையை உடைய இவை பழங்களில் காணப்படுவதால் பழவெல்லங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
இருசக்கரைட்டான சுக்குரோசு, பல்சக்கரைட்டான இனியூலினின் ஆக்கத்திலும் பங்கெடுக்கின்றது.
கலக்ரோசு
பாலுற்பத்தி உணவுகளில் காணப்படும் இவை இனிப்புச் சுவை அற்றவை.
இருசக்கரைட்டான இலக்ரோசு, பல்சக்கரைட்டான பெக்ரின்னின் ஆக்கத்திலும் பங்கெடுக்கின்றது.
- மூலக்கூற்றுச் சூத்திரம் C6H12O6
- பளிங்குருவானவை, நீரில் கரையக் கூடியவை, இனிப்புச் சுவை உடையவை
- ஒளித்தொகுப்பின் மூலம் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன
- பிரதான சுவாச அடிப்படையாகத் தொழிற்பட்டு சக்தியைப் பிறப்பிப்பவை
- அதிக இனிப்புச் சுவையை உடைய
- பாலுற்பத்தி உணவுகளில் காணப்படும்
- இனிப்புச் சுவை அற்றவை
No comments:
Post a Comment