Search

Breaking

Thursday, May 13, 2021

இரு சக்கரைட்டுக்கள்

 இரு சக்கரைட்டுக்கள்

இரண்டு ஒரு சக்கரைட்டுக்கள் இணைந்து ஒடுங்குவதன் மூலம் அவற்றினிடையே கிளைக்கோசைட்டுப் பிணைப்பு ஏற்ப்படுவதன் மூலமாக ஒரு இருசக்கரைட்டு தோன்றுவதுடன் நீர் மூலக்கூறு ஒன்றும் உருவாகும். இரு சக்கரைட்டுக்களை நீர்ப்பகுப்பதன் மூலம் அவற்றை ஆக்கியுள்ள ஒரு சக்கரைட்டுக்களைப் பெறலாம்.

மோல்ரோசு,இலக்ரோசு,சுக்குரோசு ஆகிவற்றின் மூலக்கூற்றுச் சூத்திரம் C12H22O11 ஆகும்.எனினும் இவை கட்டமைப்பில் ஒன்றிலிருந்தொன்று வேறுபட்டவை

இருசக்கரைட்டுக்கள் பொதுவாக பளிங்குருவானவை, நீரில் கரையக் கூடியவை, இனிப்புச் சுவை உடையவை.

மோல்ரோசு (C12H22O11)
இரண்டு குளுக்கோசு மூலக்கூறுகளுக்கிடையே பிணைப்பு தோன்றுவதன் மூலமாக ஒரு மூலக்கூறு  மோல்ரோசு தோன்றும். இதை மோல்ரேசு நொதியத்தைப் பயன்படுத்தி நீர்ப்பகுக்கையில் இரண்டு மூலக்கூறு குளுக்கோசு விளைவாகக் கிடைக்கும்.
முளைக்கும் வித்துக்கஒரு மூலக்கூறு குளுக்கோசு, ஒரு மூலக்கூறு கலக்ரோசு என்பவற்றுக்கிடையே பிணைப்பு தோன்றுவதன் மூலமாக ஒரு மூலக்கூறு  இலக்ரோசு தோன்றும்ளில் இவை இடைநிலை விளைபொருளாக உருவாகும். அத்துடன் மாப்பொருள் கிளைக்கோஜன் போன்ற பல்சக்கரைட்டுக்கள் சமிபாடடைகையில் இடைநிலை விளைபொருளாகவும் தோன்றும்.
மோல்ரோசு


இலக்ரோசு (C12H22O11)
ஒரு மூலக்கூறு குளுக்கோசு, ஒரு மூலக்கூறு கலக்ரோசு என்பவற்றுக்கிடையே பிணைப்பு தோன்றுவதன் மூலமாக ஒரு மூலக்கூறு  இலக்ரோசு தோன்றும். இதை இலக்ரேசு நொதியத்தைப் பயன்படுத்தி நீர்ப்பகுக்கையில் ஒரு மூலக்கூறு குளுக்கோசும், ஒரு மூலக்கூறு கலக்ரோசும் விளைவாகக் கிடைக்கும்.
இனிப்புச் சுவையில் குறைந்த இது முலையூட்டிகளின் பாலில் காணப்படுவதால் பால் வெல்லம் என்றும் அழைக்கப்படுகின்றன. 
இலக்ரோசு


சுக்குரோசு (C12H22O11)
ஒரு மூலக்கூறு குளுக்கோசு, ஒரு மூலக்கூறு பிறக்றோசு என்பவற்றின் காபனைல் கூட்டங்கள் கிளைக்கோசைட்டுப் பிணைப்பு உருவாக்கத்தில் பங்கெடுப்பதன் மூலமாக ஒரு மூலக்கூறு  சுக்குரோசு தோன்றும். இதை சுக்குரேசு நொதியத்தைப் பயன்படுத்தி நீர்ப்பகுக்கையில் ஒரு மூலக்கூறு குளுக்கோசும், ஒரு மூலக்கூறு பிறக்றோசும் விளைவாகக் கிடைக்கும்.
கரும்பு, பீற்றூட்,பதநீர் என்பவற்றில் காணப்படுவதுடன் ஒளித்தொகுப்பின் போது உருவான பிரதான விளைபொருட்கள் தாவரங்களின் உரியத்தினூடு கடத்தப்படும் உரியச்சாற்றில் சுக்குரோசாக கடத்தப்படும் 

சுக்குரோசு



பாடம் சார்பான சுருக்கக் குறிப்புக்கள்
  • இரண்டு ஒருசக்கரைட்டுக்களிற்கிடையே பிணைப்பு உருவாகுவதன் மூலம் ஒரு இருசக்ககைட்டு தோன்றுவதுடன் ஒரு நீர் மூலக்கூறு வெளிவிடப்படும்.

  • மூலக்கூற்றுச் சூத்திரம் C12H22O11 ஆகும்.

  • பொதுவாக பளிங்குருவானவை, நீரில் கரையக் கூடியவை, இனிப்புச் சுவை உடையவை

  • இரண்டு குளுக்கோசுகள் இணைந்து மோல்ரோசு தோன்றும்

  • குளுக்கோசு,  கலக்ரோசு இணைந்து கலக்ரோசு தோன்றும்

  • குளுக்கோசு, பிறக்றோசு இணைந்து சுக்குரோசு தோன்றும்

No comments:

Post a Comment

Newest